» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காய்களை பழமாக்கும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனைக்கு தடை :காஷ்மீர் அரசு உத்தரவு

புதன் 17, மே 2017 10:51:02 AM (IST)

ஜம்மு காஷ்மீரில் காய்களை பழமாக்கும்  பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எத்திபோன் என்ற மருந்து வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த மருந்தானது மனித ஆரோக்கியத்தை கெடுப்பதுடன், தாவரங்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் என்று பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து, எத்திபோன் பூச்சிக்கொல்லி மருந்தின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாநில தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியது. அதன்படி, பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. 

அந்த அறிக்கையில், எத்திபோன் மருந்தினை பயன்படுத்துவதால் மனித ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும் என்றும், தாவரங்களை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எத்திபோன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி தோட்டக்கலைத்துறை செயலாளர் மாலிக் கூறுகையில், "எத்திபோன் மருந்தை தெளித்தால் பயிர்களின் தரமும் மோசமாகும். இதுதவிர, இந்த மருந்துகளை பயன்படுத்தி பழுக்க வைக்கும் பழங்களை நீண்டகாலம் சேமித்து வைக்க முடியாது. 

தொடர்ந்து இந்த மருந்தை பயன்படுத்தினால் மரங்களின் காய்ப்புத் தன்மை குறைவதுடன், அதன் ஆயுளும் குறைந்துவிடும். தாவரங்களின் ஆரோக்கியம், பழங்களின் தரம், ஆயுள் குறைவு மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சட்ட அமலாக்கத்துறை பரிந்துரை செய்துள்ளதால், எத்திபோன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


CSC Computer Education

Johnson's Engineers


Nalam Pasumaiyagam

selvam aqua

New Shape Tailors

Universal Tiles Bazar

Pop Up Here





Thoothukudi Business Directory