» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நெஞ்சுவலியிலும் பயணிகளை காப்பாற்றி விட்டு உயிரிழந்த அரசுப்பேருந்து டிரைவர்

செவ்வாய் 16, மே 2017 1:48:18 PM (IST)

பொன்னேரியில் பணயின் போது நெஞ்சுவலி வந்தும் பயணிகளை காப்பாற்றி விட்டு பேருந்து ஓட்டுனர் உயிரிழந்துள்ள உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து ஆந்திரமாநிலம் நெல்லுாருக்கு ஆந்திரமாநில அரசுபேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அழிஞ்சிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது அப்பேருந்தின் ஓட்டுனர் குருவையாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தன் சிரமத்தை பொருட்படுத்தாமல் அந்நேரத்திலும் பேருந்தை அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி நிறுத்தி விட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த சோழாவரம் போலீசார் ஓட்டுனர் குருவையா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். தனது உயிர் போகும் நிலையிலும் பேருந்தில் உள்ள பயணிகளை காப்பாற்றி விட்டு பேருந்து ஓட்டுனர் உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்மே 19, 2017 - 04:50:33 PM | Posted IP 117.2*****

rip

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Johnson's Engineers



Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals






Thoothukudi Business Directory