» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சமூக வலைத்தளங்களை சுயநலத்திற்காக பயன்படுத்தாதீர்கள் : பிரதமர் மோடி அறிவுரை

வெள்ளி 21, ஏப்ரல் 2017 8:42:55 PM (IST)



சமூக வலைத்தளங்களை மக்கள் நலத்திற்கு பயன்படுத்துங்கள், உங்கள் சுயநலத்திற்காக அல்ல என்று பிரதமர் மோடி கூறினார்.

குடிமைப் பணி தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.அதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுமையில் உலகம் மின் -ஆளுகையிலிருந்து மொபைல் ஆளுகைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. எனவே மொபைலின் பயன்பாடு மக்களின் நலத்திற்காக இருக்க வேண்டும். நல்ல முறையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது அது பற்றிய செய்தியை பரப்புவதற்கு மொபைல்கள் பயன்படலாம் என்றார் .

அதிகாரபூர்வ கூட்டங்களுக்கு மத்தியில் அதிகாரிகள் சமூக வலைத்தளங்களை பார்வையிடுவதால் தனது கூட்டங்களில் மொபைல்களை எடுத்துவருவதற்கு தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் குடிமைப் பணி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை என்று கூறிய பிரதமர் வேடிக்கையாக ஒருவேளை தான் அதிகாரியாகியிருந்தால் 16 ஆண்டுகள் பணிபுரிந்தப் பிறகு இன்றைக்கு எந்தப் பதவியில் இருந்திருப்பேன் என்று கேட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




CSC Computer Education


selvam aqua

Nalam Pasumaiyagam



Panchai Dairy

New Shape Tailors

Black Forest Cakes

Johnson's Engineers



Thoothukudi Business Directory