» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய கடற்படையின் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை பரிசோதனை மீண்டும் வெற்றி

வெள்ளி 21, ஏப்ரல் 2017 5:32:41 PM (IST)

200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான  பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை தரைக்கு மேலாக பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறிச் சென்று தாக்கும்.

கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Black Forest Cakes


Panchai Dairy



CSC Computer Education


Nalam Pasumaiyagam


selvam aqua

New Shape Tailors

Johnson's Engineers




Thoothukudi Business Directory