» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குறைவான தண்ணீரே திறந்திருக்கிறோம் : உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா பதில்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 1:42:39 PM (IST)

தமிழகத்திற்கு கடந்த அக்.1 முதல் ஜன. 31, 2017 வரை, உச்சநீதிமன்ற உத்தரவை விட 9.21 டிஎம்சி தண்ணீர் குறைவாக தான் திறந்திருக்கிறோம் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில் மனு அளித்துள்ளது.

தொடர்புடைய படம்தமிழ்நாட்டுக்கும்,கர்நாடகாவிற்கும் இடையே காவிரி பிரச்சனை பல காலமாக உள்ளது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இன்று அவ் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத் திற்கு கடந்த அக்டோபர் மாதம் 1 ம் தேதி முதல் ஜனவரி 31, 2017 வரை, உச்சநீதிமன்ற உத்தரவை விட 9.21 டிஎம்சி தண்ணீர் குறைவாக தான் திறந்திருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதற்கு மேல் வழங்க எங்களிடம் தண்ணீர் இல்லை, எங்களிடம் தற்போது 7.23 டிஎம்சி தான் தண்ணீர் உள்ளது - எனவும் கர்நாடகா தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கர்நாடக அரசை காவிரியில் இருந்து தமிழகத்தில் நாளொன்றுக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Black Forest Cakes


CSC Computer Education

selvam aqua


New Shape Tailors

Panchai Dairy

Nalam Pasumaiyagam

Johnson's Engineers






Thoothukudi Business Directory