» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகுபலி 2 படத்தை வெளியிட கர்நாடகாவில் எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்தார் நடிகர் சத்யராஜ்

வெள்ளி 21, ஏப்ரல் 2017 1:22:49 PM (IST)

காவிரி பிரச்சனையில் கருத்து தெரிவித்ததற்கு, நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தார்.

காவிரி நதி நீர் பிரச்சனையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவை தாக்கி நடிகர் பேசியதாக சமீபத்தில் வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூகவலை தளங்களில் பரவியதை அடுத்து இப்பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் சத்யராஜ் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை திரையிட விட மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நடிகர் சத்யராஜ், 9 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது யாரையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்றும் பாகுபலி-2 படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

என்னால் பாகுபலி - 2 திரைப்படத்திற்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என கூறிய சத்யராஜ் காவிரி உள்பட தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என உறுதிபட தெரிவித்தார்.மேலும் நான் ஒரு நடிகன் என்பதைவிட, தமிழன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors

crescentopticals







Friends Track CALL TAXI & CAB (P) LTD


Johnson's Engineers



Thoothukudi Business Directory