» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வதந்திகளை பரப்பினால் வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு சிறை : காவல் துறை எச்சரிக்கை

வெள்ளி 21, ஏப்ரல் 2017 12:40:47 PM (IST)

வதந்திகளை பரப்பும் பட்சத்தில் வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் கைது செய்யப்படுவர் என வாரணாசி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக பல்வேறு போலி செய்திகள், வதந்திகள் பரவி பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயத்தையோ அல்லது பொது மக்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தவோ காரணமாக இருந்துள்ளன.  வாட்ஸ்அப் செயலி மூலம் போலியான தகவல்கள் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் வாட்ஸ்அப், பேஸ்புக் அல்லது மற்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குரூப் அட்மின்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 20 கோடி வாட்ஸ்அப் பயனாளிகளில் காவல் துறை சார்பில் குரூப் அட்மின்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் தங்களுக்கு நன்கு அறிமுகமானவர்களை மட்டும் குரூப் அட்மின்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும், வீண் வதந்திகளை பரப்பும் பட்சத்தில் அட்மின்கள் அவற்றை உடனடியாக நீக்கி, அருகாமையில் இருக்கும் காவல் துறையில் தெரிவிக்க வேண்டும். 

வாட்ஸ்அப் குரூப்களில் வதந்திகள் பரவி குரூப் அட்மின்கள் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அட்மின்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக வாரணாசி மாவட்ட காவல் துறை இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மற்ற மாவட்ட அதிகாரிகளும் இதுபோன்ற விதிமுறைகளை விதிப்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


மக்கள் கருத்து

நா தான்Apr 21, 2017 - 02:39:11 PM | Posted IP 168.2*****

இஇதெல்லாம் நடக்கிற காரியமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Johnson's Engineers

Nalam Pasumaiyagam


selvam aqua


New Shape Tailors

CSC Computer Education

Black Forest Cakes



Panchai Dairy



Thoothukudi Business Directory