» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்க கோரி பெங்களூரில் 28ம் தேதி பந்த்.. வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

வெள்ளி 21, ஏப்ரல் 2017 12:12:13 PM (IST)

கன்னடர்களை இழிவாகப் பேசிய நடிகர் சத்யராஜை கண்டித்து, பெங்களூரில் வருகிற 28-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரிப் பிரச்னை தொடர்பாக நடிகர் சத்யராஜ், கன்னடர்களையும், கன்னட சங்கங்களின் நிர்வாகிகளையும் இழிவாகப் பேசியுள்ளார். இது கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் வெளியாக உள்ளது. அதை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
 
நடிகர் சத்யராஜ் தனது பேச்சிற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவரின் பேச்சை கண்டித்து வெள்ளிக்கிழமை (ஏப்.21) தமிழக-கர்நாடக எல்லையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஏப். 28-ஆம் தேதி பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பொது சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்படாமல் கட்டுக்கோப்பாக இந்த போராட்டம் நடைபெறும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




selvam aqua



CSC Computer Education

Panchai Dairy

Nalam Pasumaiyagam


Johnson's Engineers

New Shape Tailors

Black Forest Cakes



Thoothukudi Business Directory