» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை தீவிரவாத தாக்குதல்.. ஹெட்லி, ராணாவை ஒப்படைக்க வேண்டும் - இந்தியா கோரிக்கை

வெள்ளி 21, ஏப்ரல் 2017 12:06:44 PM (IST)

மும்பை தாக்குதல் குற்றவாளிகள் டெவிட் ஹெட்லி, ராணாவை ஒப்படைக்க மீண்டும் அமெரிக்காவிற்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தானின் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களை, பாகிஸ்தானில் இருந்து இயக்கி, மூளையாக செயல்பட்டவர்கள் இருவர். ஒருவன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான லக்வி, இன்னொருவன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தாய் அமைப்பான ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவனான ஹபீஸ் முகமது சயீத். 

சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.62 கோடி) விலை வைத்துள்ளது. இவன் பாகிஸ்தானில் சுதந்திரமாக திரிகிறான். இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இது தொடர்பாக இந்தியாவில் நடந்து வரும் வழக்கில் அவன் அப்ரூவர் ஆகி வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை சிறப்பு கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கையில் ஹபீஸ் சயீத் உத்தரவின்படியே லஷ்கர்-இ-தொய்பா பணியை செய்தேன் என்றான். பாகிஸ்தான் டாக்டர் குற்றவாளி தஹவ்வுர் ஹுசைன் ராணாவும் அமெரிக்காவின் விசாரணையில் உள்ளான். 

இவர்கள் இருவரையும் இந்தியாவில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜர்படுத்த அமெரிக்காவிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்போதும் மும்பை தாக்குதல் குற்றவாளிகள் டெவிட் ஹெட்லி, தஹவ்வுர் ராணாவை ஒப்படைக்க மீண்டும் அமெரிக்காவிற்கு இந்தியா கோரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவின் எப்பிஐ துணை இயக்குநர் ஆண்ட்ரூ மெக்கபே இம்மாத தொடக்கத்தில் இந்திய பயணம் மேற்கொண்டார். மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார். 

அப்போது 2008 மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு பிரிவு ஹெட்லி மற்றும் ராணாவை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இருவரையும் இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்பது தொடர்பாக விடுக்கப்பட்ட பல கோரிக்கைகள் இன்னும் பதில் இல்லாமல் நீடிக்கிறது எனவும் தேசிய புலனாய்வு பிரிவினர் எடுத்துரைத்தனர்.  இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்களை இவர்கள் வாக்குமூலமாக தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

New Shape Tailors


CSC Computer Education

selvam aqua


Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Panchai Dairy

Johnson's Engineers




Thoothukudi Business Directory