» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

2ஜி முறைகேடு வழக்கில் இறுதிக்கட்ட வாதங்கள் நிறைவு: 3 மாதத்தில் தீர்ப்பு

வியாழன் 20, ஏப்ரல் 2017 5:29:27 PM (IST)

2ஜி ஊழல் வழக்கில் இறுதிக்கட்ட வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், இன்று 3 மாதங்களில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்தியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் விடுவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக மத்திய கணக்கு துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, தி.மு.க எம்.பி. கனிமொழி, தொலைத்தொடர்புத் துறை செயலாளர்கள், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்து. 

தற்போது அவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். தங்கள் மீதான குற்றச்சாட்டையும் மறுத்தனர். அதன் பிறகு அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். சி.பி.ஐ. தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை எடுத்து வைத்தனர். பல ஆண்டுகளாக குறுக்கு விசாரணையும் வக்கீல்கள் வாதமும் நீடித்தது.

தொடர்ந்து இறுதி வாதங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்னும் 3 மாதத்தில் நீதிபதி ஓ. பி. சைனி தீர்ப்பு கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 ஜி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் 2 வழக்குகளும், அமலாக்கப்புரிவு சார்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. கனிமொழி, ஆ.ராசா தவிர ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய 3 நிறுவனங்களும் வழக்கை சந்தித்தன.


மக்கள் கருத்து

selvakumarApr 23, 2017 - 12:17:36 PM | Posted IP 103.2*****

அடுத்து நீங்கதான் -திகார் welcome

santhaanamApr 21, 2017 - 11:35:03 AM | Posted IP 117.2*****

திகார் தயாராகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


CSC Computer Education

selvam aqua


Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

Johnson's Engineers

Pop Up Here


New Shape Tailors




Thoothukudi Business Directory