» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக மிதியடி: சுஷ்மா எச்சரிக்கையால் திரும்பப்பெற்ற அமேசான்

வியாழன் 12, ஜனவரி 2017 3:47:50 PM (IST)

இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக மூவர்ணம் அடங்கிய மிதியடிகளை  ஆன்லைனில் இருந்து திரும்பப் பெற்றது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தகவலை இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்துள்ளது. உலகளாவிய அளவில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் முன்னிலை வகித்து வரும் நிறுவனம் அமேசான். இந்நிறுவனம், இந்திய தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்கள் அடங்கிய மிதியடிகளை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான புகைப்படங்களைப் பொதுமக்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சுஷ்மா, அமேசான் நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும். இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் அனைத்துப் பொருட்களையும் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அமேசான் அதிகாரிகளுக்கு இந்திய விசா அளிக்கப்பட மாட்டாது. ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும் விசாக்களும் ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அமேசான் நிறுவனம் மூவர்ணம் கொண்ட மிதியடிகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அவற்றை விற்கவில்லை என்றும், கனடாவில் மட்டுமே அவை விற்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. எனினும் கனடா விற்பனையையும் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்திருக்கிறது அமேசான். கடந்த வருடம் அமேசான் நிறுவனம், இந்து மத தெய்வங்கள் பதிக்கப்பட்ட மிதியடிகளையும், இஸ்லாமிய பதிப்புகள் அடங்கிய மிதியடிகளையும் வெளியிட்டு, கடும் எதிர்ப்புக்குப் பிறகு அவற்றை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

மக்கள்Jan 13, 2017 - 01:25:20 PM | Posted IP 103.5*****

உடனடியாக ஏற்க்கனவே அளிக்கப்பட்ட விசா தடை செய்திருந்தால் அமேசான் நிறுவனம் இந்த மர்திரி செய்யமாட்டான். இப்பொழுது அவன் ஆழம் பார்த்திருக்கிறான். இன்னும் கடுமையான நடவடிக்கை வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Nalam Pasumaiyagam







selvam aqua


CSC Computer Education


Black Forest Cakes



Thoothukudi Business Directory