» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

500 ,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனும் அறிவிப்பே தெரியாமல் கேரள மூதாட்டி தவிப்பு

புதன் 11, ஜனவரி 2017 1:58:25 PM (IST)

இந்தியா முழுவதும் அதிர்வலைகளை கிளப்பிய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் விவகாரம் சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்ததால் கேரளாவில் மூதாட்டி ஒருவர் தனது பழைய ரூபாய்களை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வரப்புழா என்னும் சிற்றூரில் தனியாக வசித்து வருபவர் சதி (75) எனும் மூதாட்டி . நர்சாக பணியாற்றி 20 வருடங்களுக்கு முன்பே ஒய்வு பெற்று.மகளும் கணவரும் இறந்து விட்டதால் ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். அந்த வீட்டில் மின்சாரம், தொலைபேசி, தொலை க்காட்சி, ரேடியோ என்று எதுவும் கிடையாது. தனக்கான பொருட்களை வாங்க எப்போதாவதுதான் வீட்டை விட்டு வெளியே வருவார். 

மற்ற நாட்களில் வீடு எப்போதும் பூட்டியே இருக்கும். அண்மையில் காய்கறி வாங்குவதற்காக கடைக்குச் சென்றவர் பழைய 500 ரூபாய் நோட்டை கடைக்காரரிடம் நீட்டியுள்ளார். அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்று அவர் கூறியதைக் கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏன் என கடைக்காரரிடம் கேட்க அவர் முழு விவரத்தையும் கூற அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

இதையடுத்து தனது ஓய்வூதியத் தொகை வரப்பெறும் சேமிப்புக் கணக்கு இருக்கும் வங்கிக் கிளைக்கு, தான் வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் சென்றிருக்கிறார் சதி . ஆனால், அவரது துரதிர்ஷ்டம் பிரதமர் மோடி அறிவித்த டிசம்பர் 31 காலக்கேடு அதற்கு முன்பே முடிந்திருந்தது. பை நிறைய பாட்டி வைத்திருந்த பணத்தை வங்கி அதிகாரிகள் மாற்ற முடியாது என்று கூறி விட்டார்கள். இதனால் வங்கி வாசலிலேயே நின்று கூச்சலிட்டுள்ளார்.

அவரின் நிலைமை அறிந்து அந்த ஊர் பஞ்சாயத்து கமிட்டி அவர் ரிசர்வ் வங்கியை நாட உதவி செய்து வருகிறது. ஆனால் யாரையும் எளிதில் நம்பாத சதி பாட்டி அந்த உதவியையும் வேண்டாம் என்று கூறியுள்ளார். கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த சதி பாட்டியை ஏமாற்றி அவரிடமிருந்த பணத்தை யாரோ ஒருவர் அபகரித்துக் கொண்டுள்ளார். அந்த சம்பவமே சதி பாட்டி இப்படி ஆனதற்குக் காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

CSC Computer Education

Black Forest Cakes

Pop Up Here

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam



Johnson's Engineers


selvam aqua



Thoothukudi Business Directory