» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே ரூபாய் நோட்டு தடைக்கு பரிந்துரை : ரிசர்வ் வங்கி விளக்கம்
புதன் 11, ஜனவரி 2017 8:36:16 AM (IST)
மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பாராளுமன்ற குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி இரவு எடுத்தது. மத்திய அரசின் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ரிசர்வ் வங்கியே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததா? என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. இதுபற்றி ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி தலைமையிலான பாராளுமன்ற நிதி குழு கேட்டுக் கொண்டிருந்தது.
இதற்கு விளக்கம் அளித்து ரிசர்வ் வங்கி தரப்பில் 7 பக்கங்கள் கொண்ட குறிப்பை நேற்று பாராளுமன்ற நிதி குழுவுக்கு அனுப்பி வைத்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது: 2016–ம் ஆண்டு நவம்பர் 7–ந்தேதி மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு ஒரு குறிப்பை அனுப்பி இருந்தது. அதில் கள்ளநோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி, கருப்பு பணம் ஆகிய 3 பெரும் பிரச்சினைகள் உள்ளன. எனவே ரூ.500, ரூ.1,000 மதிப்பிலான நோட்டுகளை திரும்பப் பெறுவதற்குரிய நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து மறுநாளே ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூடி மத்திய அரசின் அறிவுரை குறித்து பரிசீலனை செய்தது. இதுபற்றி ஆழ்ந்து யோசிக்கப்பட்ட பிறகு, உயர் மதிப்பிலான நோட்டுகளை திரும்பப் பெறலாம் என்ற பரிந்துரையை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவித்தது. கருப்பு பணம், கள்ளநோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது ஆகிய பிரச்சினைகளை கையாளுவதில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இது அரியதொரு வாய்ப்பாக அமைந்ததால் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
வியாழன் 19, ஏப்ரல் 2018 12:53:12 PM (IST)

குஜராத்தில் ரூ.2,654 கோடி கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் - மகன்கள் கைது: சிபிஐ நடவடிக்கை
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:03:45 AM (IST)

நாடு முழுவதும் அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை 25% அதிகரிப்பு: சிஏஐடி தகவல்
வியாழன் 19, ஏப்ரல் 2018 10:32:49 AM (IST)

பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கின் கண்கள் கட்டப்பட்டுள்ளது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
புதன் 18, ஏப்ரல் 2018 5:36:48 PM (IST)

எச்.ராஜா டுவிட்டுக்கு ப. சிதம்பரம் கண்டனம்.. குண்டர் சட்டத்தில் கைது செய்ய முத்தரசன் வலியுறுத்தல்!!
புதன் 18, ஏப்ரல் 2018 3:25:50 PM (IST)

மத்தியபிரதேசத்தில் கோர விபத்து: மினி லாரி ஆற்றில் கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!!
புதன் 18, ஏப்ரல் 2018 12:30:51 PM (IST)
