» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாலையில் அடிபட்டவர்களை காப்பாற்றினால் 2,000 ரூபாய் பரிசு, சிறந்த குடிமகன் விருது

செவ்வாய் 10, ஜனவரி 2017 8:34:48 PM (IST)

விபத்தினால் சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்களை மருத்துவமனையில் சேர்த்தால், அவர்களுக்கு 2,000 ரூபாய் பரிசுத் தொகை, சிறந்த குடிமகன் விருது வழங்கப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிஷோதியா பிறப்பித்துள்ளார்.டெல்லியில் எவ்வளவு தான் சாலைக் கட்டுப்பாடுகள் விதித்தா லும், விபத்துகள் குறைய வில்லை. 

அதைவிட, விபத்தில் அடிபட்டுக் கிடப்பவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை தாமதமாகக் கிடைப்பதால், உயிரிழப்புகளும் அதிகம் நிகழ ஆரம்பித்து விட்டன. இதைத் தடுக்கும் பொருட்டுதான் இப்படி ஒரு சட்டத்தை இயற்றியிருக்கிறது டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சகம்.

விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களை கேள்விக்கணைகளால் ஆஸ்பத்திரி நிர்வாகம்,மற்றும் போலீசார் துளைத்து எடுத்து விடுகின்றனர். இதற்கு பயந்தே அடிபட்டவர்களை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.அதை மாற்றவே இந்த ஏற்பாடு என டெல்லி அரசு கூறியுள்ளது. இந்த அறிவிப்பை மற்ற மாநிலங்கள் விரைவில் பின்பற்றுமா என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Joseph Marketing



crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory