» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு 60 லட்சம் வங்கிகளில் ரூ.4 லட்சம் கோடி கருப்பு பணம் டெபாசிட்

செவ்வாய் 10, ஜனவரி 2017 5:24:26 PM (IST)

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு ரூ.4 லட்சம் கோடி கருப்பு பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் விதமாக உயர் மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகளை அச்சடித்து மத்திய அரசு புழக்கத்தில் விட்டன. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கான கால அவகாசம் 50 நாட்கள் ஆகும். கடந்த மாதம் 30-ந் தேதியுடன் வங்கியில் டெபாசிட் செய்வதற்கான அவகாசம் முடிந்தது.

ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்புக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.4 லட்சம் கோடி வரை வரி ஏய்ப்பு செய்த பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது. இதை வருமான வரித்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு 60 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது மாதிரியான வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.7.34 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் ஆகியுள்ளது.

நவம்பர் 9-ந் தேதிக்கு பிறகு வட கிழக்கு மாநிலங்களில் ரூ.10,700 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வருமான வரித்துறையும், அமலாக்க பிரிவினரும் ஆய்வு நடத்தி வருகின்றனர். நீண்ட காலமாக செயல்படாத வங்கி கணக்குகளில் ரூ.25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கியில் வாங்கிய கடனுக்காக சுமார் ரூ.80 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals





Joseph Marketing

New Shape Tailors



Thoothukudi Business Directory