» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 தமிழர்களை காப்பாற்ற கருணை மனு தாக்கல்: சுஷ்மா தகவல்
செவ்வாய் 10, ஜனவரி 2017 5:17:12 PM (IST)
கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2 தமிழர்களை விடுவிக்க இந்திய அரசு கருணை மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, வழக்கு செலவுக்காக ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான எச்.வசந்தகுமாரும், இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, 2 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, கத்தார் சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தூதரகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மற்றொரு தமிழரான சிவக்குமார் அரசனின் சிறைத் தண்டனையை 15 ஆண்டுகளாக குறைத்தது.
தற்போது, இந்த கொலை வழக்கு குறித்த விவரங்களை இந்திய அரசு சேகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 2 பேரின் குடும்பங்கள் சார்பில் கருணை மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘தமிழகத்தை சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன் மற்றும் செல்லத்துரை பெருமாள் ஆகியோரின் மரண தண்டனை குறித்த அறிக்கையை பெற்றுள்ளேன். இந்த வழக்கில் 2 பேரின் குடும்பத்தினர் சார்பில் கருணை மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கு உதவுமாறு தமிழக அரசை கேட்டிருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எதையும் செய்வார் : ரோஜா கடும் தாக்கு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 8:56:49 PM (IST)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 8:52:33 PM (IST)

வங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:36:43 AM (IST)

புது டெல்லி பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து : 4 மணி நேரத்திற்கு பின்னர் அணைப்பு
சனி 21, ஏப்ரல் 2018 7:57:18 PM (IST)

பணமதிப்பிழப்புக்குப் பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: புலனாய்வுப் பிரிவு திடுக்கிடும் தகவல்
சனி 21, ஏப்ரல் 2018 5:34:14 PM (IST)

தமிழகத்தை போல ஆந்திராவை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது: சந்திரபாபு நாயுடு
சனி 21, ஏப்ரல் 2018 5:23:00 PM (IST)
