கெத்து பட ஸ்டில்ஸ்

கெத்து பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் புதன் 27, மே 2015
நேரம் 7:15:45 PM (IST)

ஜெகதீஸ் இயக்கத்தில் உதயநிதி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ’நண்பேன்டா’ எப்போதும் சிரித்த முகமாக நடித்த உதயநிதி இதில் ரொம்ப சீரியஸாக ஆக்‌ஷன் கதையம்சத்தில் நடிக்கிறாராம். இந்தப் படத்தையும் அவரது ரெட்ஜெயன்ட் மூவீஸ்தான் தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறார் திருக்குமரன். எந்த வம்புக்கும் போகாமல், எப்பவுமே யோகா, தியானம் என அமைதியாக இருக்கும் பையனாக உதயநிதி ஸ்டாலின். அசைவம்கூட சாப்பிட மாட்டார். ஆனால் அவரது அப்பா சத்யராஜ் அவருக்கு நேரெதிர். சின்ன தப்பைக்கூட ரஃப் அண்ட் டஃப்பாக தட்டிக் கேட்கும் சுபாவி. அப்பாவின் கோபத்தால் மகனுக்கு ஒரு பிரச்னை. அதை அவர் எப்படித் தீர்க்கிறார் என்பது தான் மீதிக் கதை என படத்தின் கதையாக சொல்லப்படுகிறது.Thoothukudi Business Directory