பிரசாந்தின் சாகசத்தில் நர்கிஸ்பக்ரி

பிரசாந்தின் சாகசத்தில் நர்கிஸ்பக்ரி
பதிவு செய்த நாள் செவ்வாய் 19, ஆகஸ்ட் 2014
நேரம் 8:26:15 PM (IST)

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் நர்கிஸ் பக்ரி. இவர் தமிழில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் சாஹசம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறார். இதற்காக சமீபத்தில் சென்னை வந்தார். ஷூட்டிங்கில் பங்கேற்ற அவருக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்னிந்திய உணவில் என்னென்ன வகைகள் உண்டு. அசைவம் எத்தனை வகை? சைவம் எத்தனை வகை? என்று அவருக்கு பிரசாந்தும் மற்றும் சக நடிகர்களும் விளக்கினார்கள். அதைக்கேட்டு நாவில் எச்சில் ஊற, எல்லாவற்றையும் ஒரு கை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்று ஆசை வெளிப்படுத்தினார் நர்கிஸ். உடனடியாக தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபற்றி நர்கிஸ் கூறும்போது, சென்னை வந்திறங்கியது முதலே தென்னிந்திய உணவை ருசிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. சரியான விருந்து சாப்பிட்டேன். காரசாரமான நண்டு, இறால் வகை உணவுகள் என் நாவில் எச்சில் ஊற வைத்துவிட்டது. மசாலா கலந்த சூப்பர் ருசியுடன் ஒரு அசைவ உணவு சாப்பிட்டேன். அது என்ன என்று விசாரித்தபோது, பிரைன் மசாலா என்றனர். பெயரை கேட்கவே தமாஷாக இருந்தது என்றார்.Thoothukudi Business Directory