சூர்யா‍‍-ஸ்ருதி நடிக்கும் ஏழாம் அறிவு

சூர்யா‍‍-ஸ்ருதி நடிக்கும் ஏழாம் அறிவு
பதிவு செய்த நாள் ஞாயிறு 7, ஆகஸ்ட் 2011
நேரம் 8:48:33 PM (IST)

ஏழாம் அறிவு -சூர்யா -தமிழ் சினிமாவின் புது சரித்திரம் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு..சித்தர் போகரின் வரலாறு என்னும் பரபரப்பு செய்தி கிடைத்திருக்கிறது...ஏழாம் அறிவு சினிமாவின் பாடல்கள்விரைவில் என்ற அறிவிப்புடன் வெளிவந்திருக்கும் ஸ்டில்கள் மிரட்டுவதாக இருக்கின்றன. இந்திய மண்ணில் இருக்கும் அமானுஷ்யம்..சித்தர்கள் சித்து விளையாட்டுகள்,போகர் சீன தேசத்திற்கு வான்வழியாக பறந்து சென்று அங்கு பல ஆண்டுகள் செய்த சாதனைகள் அங்குள்ள அவர் கோயிலில் இருக்கும் மர்மம்..பற்றி இதுவரை வெளிவராத 2000 வருட பழமையான மர்மங்களை இப்படம் வெளிக்கொணரும் என தெரிகிறது... ஏழாம் அரிவு என்ற டைட்டிலில் அதன் பொருள்;மனிதனின் ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்டு ஒரு அறிவு இருக்கிறது என சொல்லாமல் சொல்கிறது.அது சித்தர்களின் அணு அளவு சுருங்குதல்,காற்றில் கலத்தல்,பெரும் உருவம் எடுத்தல்,சிறு உருவம் எடுத்தல்,சித்துக்கள் செய்தல் பற்றிய பிரம்மாண்டமான காட்சிகள் கொண்ட கதையாக இருக்கலாம்...அப்படியிருப்பின் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.Thoothukudi Business Directory