ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி
பதிவு செய்த நாள் | சனி 6, நவம்பர் 2010 |
---|---|
நேரம் | 6:05:06 PM (IST) |
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவர்களின் அருளாசியுடன் 23ம் ஆண்டு தீபாவளி சமுதாயப் பணிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குவியல் ஆதரவற்றோர் இல்லம், நேசக்கரங்கள் இல்லம், கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், அன்னை கருணை இல்லம், கதிர்வேல் நகர் ஆன்மாவின் அன்புக் காப்பகம், பெத்தானி பார்வையற்ற பெண்கள் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழஅழகாபுரி, பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், நரிக்குறவர் குடியிருப்பு மற்றும் தெருவோர ஏழைமக்கள் உள்ளிட்ட 1000பேருக்கு 6 வகையான இனிப்பு பலகாரங்களும், 51 பேருக்கு புத்தாடைகள், வேஷ்டி சேலைகள், போர்வைகள் வழங்கினர். (படங்கள்:முருகன்)